Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்னையில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் அரக்கோணம் தேசியப் பேரிடர் மீட்புப்படை

சென்னையில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் அரக்கோணம் தேசியப் பேரிடர் மீட்புப்படை
பருவமழை மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக சென்னைக்கு விரைந்த அரக்கோணம் தேசியப் பேரிடர் மீட்பு படை வீரர்கள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கியது.

பகிரவும் WhatsApp Facebook

கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 5 குழுவினர் சென்னை வந்தனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பருவமழை மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக ராணிப்பேட்டை மாவட்டம் நகரிகுப்பத்தில் இயங்கி வரும் தேசிய பேரிடர் மீட்புப் படை 4-வது பட்டாலியனில் இருந்து ஒரு குழுவுக்கு 30 பேர் வீதம் 5 குழுக்கள் விரைந்தனர்.

வீரர்கள் தங்களுடன் மரம் அறுக்கும் நவீன கருவிகள், ரப்பர் படகுகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவைகளுடன் புறப்பட்டனர். மேலும் 3 குழுக்களைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளதாக சீனியர் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் தெரிவித்தார்.
 
 
முந்தைய செய்தி
Global nuclear expansion faces uranium supply challenge as existing mines decline: IAEA
அடுத்த செய்தி
மேற்கத்திய நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்